fbpx

“உன்னோட பையனுக்கு எங்க பொண்ணு கேக்குதா?”; தகராறில், காதலனின் தந்தைக்கு நேர்ந்த சோகம்..

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தென்னம்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான பிரசாந்த். இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் காதல் குறித்து, இவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அது கைக்கலப்பாக மாறியுள்ளது. தகராறு முற்றிய நிலையில், பிரசாந்தின் தந்தை குணசேகரனை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் குணசேகரன் பலத்த காயமடைந்த நிலையில், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், இளம் பெண்ணின் உறவினர்கள் முருகேசன், சிவக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Maha

Next Post

"என்ன காப்பாத்துங்க"; உடலில் தீ எரிந்தபடி, சாலையில் ஓடி வந்த கர்ப்பிணி பெண்.. போதையில், கணவன் செய்த கொடூரம்..

Fri Oct 13 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம், வண்டி பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 28 வயதான ராஜ்குமார். மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவருக்கு, 25 வயதான நந்தினி என்ற மனைவியும், 6 வயதான ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி நந்தினி, தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று மதியம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ராஜ்குமார், தனது மனைவிஇடம் வாக்குவாதம் […]

You May Like