பெங்களூரில் பூங்காவில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த 25ஆம் தேதி இரவு காதலர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பூங்காவில் இருந்த வாலிபர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது மூன்று நணபர்களை அழைந்து வந்து, காதலனை மிரட்டி துரத்திவிட்டுள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்ணை கடத்திச்சென்று ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவத்தை வெளியே கூறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இளம்பெண்ணை மிரட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறது. இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சதீஷ், விஜய், ஸ்ரீதர் மற்றும் கிரண் என்ற 4 இளைஞர்களை பெங்களூரு போலீசார் கைதுசெய்துள்ளனர்.