2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 முதல் 2.22 மணி வரை நிகழ்கிறது. இந்த கிரகணத்தை மக்கள் தெளிவாக பார்க்கலாம் என கூறப்படுகிறது.
சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிவதால் 8 மணி நேரம் தோஷ காலமாக கருதப்படுகிறது. இந்த கிரகணம் ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம் நட்சத்திரங்களுக்கு தோஷம் தரும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நட்சத்திரக்காரர்கள், மறுநாள் காலை எழுந்து நீராடி சிவாலயம் சென்று சிவனுக்கு வில்வம் வாங்கி தரிசனம் செய்வதால், கிரகண தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சந்திர கிரகணம் நடப்பதால், இன்று இரவு சாப்பிடக்கூடாது என சொல்வது அறிவியல் ரீதியான உண்மையில்லை என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரகணம் துவங்குவதற்கு 6 மணி நேரம் முன்னதாக கோயில்களில் நடைகளை அடைப்பது வழக்கம். இந்நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்றிவு 7.05 முதல் அதிகாலை மணி 3:15 வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.