fbpx

நுரையீரல் தொற்று..!! சீதாராம் யெச்சூரி எப்படி இருக்கிறார்..? மருத்துவர்கள் சொன்ன பரபரப்பு தகவல்..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவர், மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பல ஆண்டுகள் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தொடர்ந்து 3 முறை தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அதில், நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரியவந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’ரயிலில் இனி நிம்மதியா தூங்கலாம்’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..!!

English Summary

Communist Party of India General Secretary Sitaram Yechury has been admitted to the intensive care unit of AIIMS in Delhi.

Chella

Next Post

ஹனிமூன் என்று பெயர் எப்படி வந்தது தெரியுமா? பலருக்கு தெரியாத சுவாரசிய தகவல்..!!

Tue Aug 20 , 2024
Do you know how the name Honeymoon came about?

You May Like