fbpx

கள்ளக்காதலன் மீது காம வெறி..!! கணவனை தீர்த்துக் கட்ட யூடியூபில் வீடியோ பார்த்த மனைவி..!! பகீர் சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னகாக்காவேரி பகுதியில் குணசேகரன் (30), இளவரசி (27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, எலச்சிபாளையம் அருகே நல்லம்பாளையம் சக்திவேல் என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர். அப்போது, தோட்ட உரிமையாளர் சக்திவேலுவுடன் இளவரசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் சிறிது காலத்தில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் கணவன் குணசேகரனுக்கு தெரியவந்ததால், மனைவியை கண்டித்துள்ளார். மேலும் ஒரு மாதத்திற்கு முன், மனைவியுடன் சொந்த ஊரான சின்னகாக்காவேரிக்கு சென்று விட்டார். எனினும் சக்திவேலும் – இளவரசியும் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு இரவு 11.30 மணியளவில், சக்திவேல் தனது நண்பர்கள் 2 பேருடன் இளவரசியை சந்திக்க சென்றார். அப்போது, இளவரசிக்கு போன் செய்து கதவை திறக்குமாறு கூறியுள்ளார். அவர் கதவை திறந்ததும், உள்ளே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குணசேகரன் முகத்தில் தலையணையை வைத்து சக்திவேல், இளவரசி மற்றும் கூட்டாளிகள் என 4 பேரும் அழுத்தி உள்ளனர்.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட குணசேகரன் அலறித் துடித்தார். மேலும் அவரது அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை கவனித்த சக்திவேல் அவரது நண்பர்களுடன் தப்பியோடி விட்டார். இளவரசியை அப்பகுதியினர் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், இளவரசியை கைது செய்தனர். விசாரணையில், சொந்த ஊருக்கு வந்த பிறகு செல்போனில் பேசிய போது கணவன் குணசேகரனை கொலைச் செய்ய இளவரசி திட்டம் தீட்டியது அம்பலமானது. போலீசாரிடம் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என்பது தொடர்பான வீடியோக்களை யூடியூபில் பார்த்துள்ளார்.

அதன்படி, அருகில் உள்ள மளிகை கடையில் மைதா மாவு வாங்கி வந்து அதனை உருண்டையாக உருட்டி, தலையணையை வைத்து அழுத்தும் போது, கணவன் வாயை திறந்து கத்த முயன்றால், அவரது வாயில் அதை திணித்து அடைக்க தயாராக வைத்திருந்தார். மேலும், மைதா மாவு தூவினால், கைரேகையை தடயவியல் நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் அவ்வாறு செய்ததாக போலீசாரிடம் இளவரசி தெரிவித்துள்ளார். கணவனை தீர்த்தக்கட்ட முயன்ற இளவரசி சிக்கிய நிலையில், அவரது கள்ளக்காதலன் சக்திவேல், அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

Chella

Next Post

டேட்டிங் செயலி மூலமாக பெண்களைப் போல பேசி ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கும்பல்…..! மும்பையில் அதிரடி கைது…..!

Mon Jun 12 , 2023
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நாளுக்கு நாள் மக்களுக்கு பல்வேறு விதமான துன்பங்களும், மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த விதத்தில், ஆண்களை குறி வைத்து மோசடி கும்பல் கடந்த சில வருடங்களாகவே மோசடி செய்து அதன் மூலமாக பணத்தை பறித்து வருகிறது. இத்தகைய நிலையில், லோகேண்டோ டேட்டிங் செயலின் மூலமாக பெண்களை போல பேசி கோவையைச் சேர்ந்த பலரிடம் […]
கள்ளக்குறிச்சி கலவரம்..! ட்விட்டர் நிறுவனத்தை அணுகிய மாவட்ட காவல்துறை..! எதற்காக தெரியுமா?

You May Like