fbpx

சொகுசு காரை தரைமட்டமாக்கும் சண்டை காட்சி..!! காயங்களுடன் உயிர் தப்பிய பிரபல நடிகரின் மகன்..!!

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் ஹம்சவர்தன். இவர், தமிழில் மானசீக காதல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், மந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ள படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். தற்போது, இவர் நாயகனாக நடிக்கும் ‘மகேஸ்வரா’ படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.

மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹரா’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். படத்தில் உயர்ரக சொகுசு பென்ஸ் கார் ஒன்றை நொறுக்கி தரைமட்டமாக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிறு காயங்களுடன் ஹம்சவர்தன் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர்.

உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் மகேஸ்வரா படத்தில் ராம்கி, ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம், பி.எல்.தேனப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அதிக பொருள்செல்வில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யா, பொலிவியா, ஐரோப்பியா நாடுகளில் எடுக்கப்படவுள்ளது.

Read More : பாலியல் வழக்கில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி..!! அறிவிக்கப்பட்ட தேசிய விருதை ரத்து செய்வதாக அறிவிப்பு..!!

English Summary

Currently, the shooting of the film ‘Maheswara’ in which he is playing the hero was held in Trichy and its surrounding areas.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசின் இந்த சூப்பரான அறிவிப்பை கவனிச்சீங்களா..?

Sun Oct 6 , 2024
Installation of mini ATMs in ration shops is progressing rapidly.

You May Like