fbpx

அதிநவீன சொகுசு காரை இறக்குமதி செய்த தமிழக அமைச்சர்.. அதுவும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே…

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பிரபலமான லேண்ட் க்ரூஸர் காருக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.. 4 ஆண்டுகள் காத்திருந்தால் தான் இந்த காரை வாங்க முடியும் என்ற அளவு அதிக டிமாண்ட் நிலவுவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு, லேண்ட க்ரூஸ்ர் காரை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. விலை உயர்ந்த இந்த காரை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு கொண்டு வரவில்லை என்பது கூடுதல் சிறப்பு…

இந்த கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற அறிவிப்பு கூட வெளியாகவில்லை.. ஆனால் இந்த கார் ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேருவின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.. அமைச்சர் நேருவிடம் ஏற்கனவே பல டொயோட்டா நிறுவன கார்கள் உள்ளன.. டொயோட்டா ஃபார்ச்சுனர், புதிய மற்றும் பழைய தலைமுறை கார்கள் அவரின் பயன்பாட்டில் இருக்கின்றன.. இந்த நிலையில் ரூ.2 கோடி மதிப்புள்ள புதிய லேண்ட் க்ரூஸர் காரையும் அவர் வாங்கி உள்ளார்.. இந்த காரை அவர் பிரத்யேகமாக இறக்குமதி செய்திருப்பதால் நுழைவு வரி உள்ளிட்ட பல மடங்கு கூடுதல் கட்டணங்களை அவர் செலுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது..

அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த சொகுசு காரை டொயோட்டா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் களமிறக்க இருப்பதாக தெரிகிறது.. எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த லேண்ட் க்ரூஸர் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Maha

Next Post

அடங்காத சீனா.. இந்திய எல்லையில் புதிய நெடுஞ்சாலை அமைக்க திட்டம்.. மீண்டும் பதற்றம்..

Thu Jul 21 , 2022
இந்தியாவின் சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலை தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் இருநாட்டு ராணுவமும் வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்து […]
சீனா

You May Like