fbpx

சிகரெட் லைட்டர்கள் இறக்குதிக்கு தடை விதியுங்கள் …மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் …

இந்தியாவில் சிகரெட்டை பற்ற வைக்க பயன்படுத்தப்படும் லைட்டர்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றார். அப்போது கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கையான லைட்டர்களை இறக்குமதி செய்யவதை தடை செய்ய வேண்டும் என்பதை மத்திய அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கடிதமாக எழுதினார்.

மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அவர் எழுதிய கடிதத்தில் , ’’ சீனா, போன்ற நாடுகுளில் இருந்து சட்டப்பூர்வதாகவும் , சட்ட விரோதமாகவும் இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் விளைவாக, தொழில்துறை தனது உள்நாட்டு சந்தையை வேகமாக இழந்து வருகின்றது. எனவே தீப்பெட்டி தொழிலாளர்களின் விளைவாக , தொழில்துறை தனது உள்நாட்டு சந்தையையும் வேகமாக இழக்கும்நிலை உருவாகின்றது. தீப்பெட்டி தொழிலாளர்கள் கடினமான கட்டத்தில் உள்ளார்கள். ரூ.400 கோடி அந்நியச் செலாவணி வருவாயை தீப்பெட்டி ஏற்றுமதி ஈர்க்கின்றது. எனவே லைட்டர்கள் இறக்குதியை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த லைட்டர்கள் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருமுறை பயன்படுத்திவிட்டுஇந்த பிளாஸ்டிக் லைட்டர்களை தூக்கிபோடுகின்றனர். இது சுற்றுச்சூழலுக்கு கேடுதான். சட்டவிரோதமாக இறக்குமதி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ’’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

மணி சார் படத்தில் நடிப்பதே பெரும்பாக்கியம்.. நடிகர் ஜெயம்ரவி உருக்கம்

Thu Sep 8 , 2022
 பொன்னியின் செல்வம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம்ரவி .. மணி சார் படத்தில் நடிப்பதே பெரும் பாக்கியம் என உருக்கமாக பேசியுள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது நடிகர் ஜெயம் ரவி பேசுகையில் ’’ எல்லாரும் பேசிவிட்டார்கள். நான் என நினைக்கும் போது , வீரர்கள் சொல்லும் ஒரு வார்த்தை பார்த்துக்கலாம் என கமல் சார் கூறும் […]

You May Like