fbpx

“இனி குழந்தைகள் மேல கை வச்சா கட் தான்…”! ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம்.! பிப்.2 முதல் அமல்.!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் கடுமையான தண்டனைகளை அமல்படுத்தி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பொதுவாக கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது . எனினும் மற்ற நாடுகளில் மனித உரிமை சட்டங்களின் காரணமாக மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆனால் இதற்கு பதிலாக பல கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும், கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாடான மடகாஸ்கர், பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் ரசாயனம் செலுத்தி அல்லது அறுவை சிகிச்சை செய்து குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக சில மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர்.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டம் மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு மடகாஸ்கர் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு அந்நாட்டின் அதிபர் ஆண்ட்ரெஸ் ரஜோலினா கையெழுத்துடன் அமலுக்கு வந்திருக்கிறது. குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் லாண்டி ம்போலாட்டியான ரண்ட்ரிமானந்தேசோவா தெரிவித்தார்.

இந்த சட்டத்தில் உள்ள விதிகளின்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களின் ஆண்மை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். மேலும் 10 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ரசாயன முறையில் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் ஆண்மை நீக்கப்படும் என தெரிவிக்கிறது. மேலும் 14 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் செலுத்தி ஆண்மை நீக்கப்படும் எனவும் அந்த சட்டம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா போன்ற மாகாணங்களில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. எனினும் அறுவை சிகிச்சையின் மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்தை மடகாஸ்கர் அறிமுகப்படுத்தி இருப்பது பல நாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Post

தேமுதிக யாருடன் கூட்டணி..? பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..!!

Mon Feb 12 , 2024
மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தங்களின் அடுத்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் அறிவிப்பிலும் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், […]

You May Like