நெல்லை மாவட்டத்தில் ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெண்படல சுழற்சி எனப்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காற்றின் மூலமாகவும், மாசு மூலமாகவும் வேகமாக பரவக் கூடியது என்பதால் தற்போது பல்வேறு மாவட்டங்களில் ’மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. சென்னையில் கடந்த வாரத்தில் எழும்பூர் மருத்துவமனைக்கு தினசரி 5 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 50 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, மற்ற தனியார் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மெட்ராஸ் ஐ காற்று மூலமாக பரவுவதால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்டத்தில் வேகமாக மெட்ராஸ் ஐ நோய் பரவி வருவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நெல்லை மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.