fbpx

தமிழகத்தில் தீயாய் பரவும் ’மெட்ராஸ் ஐ’..!! தினசரி 4,500 பேர் கன்ஃபார்ம்..!! எச்சரிக்கும் அமைச்சர்..!!

தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ விரைந்து பரவும் தன்மையுடைய நோய் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மக்கள் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது.

https://www.youtube.com/watch?v=TDvWSF2Z-OQ&feature=youtu.be

மெட்ராஸ் ஐ நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. யாருக்கும் இதுவரை கண்பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகின்றனர். மெட்ராஸ் ஐ பாதித்தால் குடும்ப நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வது நல்லவது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை..? உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

Mon Nov 21 , 2022
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பின்னர் தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘கடந்த 3 மாதத்துக்கு முன்னர் உச்சநீதிமன்றம் […]

You May Like