கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது..
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் கடந்த மாதம் 15-ம் தேதி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து அவர் ஜாமீன் கோரி, எழும்பூர் நீதிமன்றம், முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்..
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, யூ டியூபில் இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது பேஷனாகிவிட்டது என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.. மீண்டும் இதுபோன்று பேசமாட்டேன் என உறுதியளிக்கும் பட்சத்தில் ஜாமீன் வழங்கலாம் என்று தெரிவித்து, கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.. மேலும் விசாரணை அதிகாரி முன் 4 வாரங்களுக்கு இரு வேளையும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிபதி பிறப்பித்தார்.. இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கனல் கண்ணனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்,,