fbpx

தப்பித்த அதிமுக முன்னாள் அமைச்சர்…! ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது என மிரட்டியதாக தாந்தோணி ஊராட்சி ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் மற்றும் 4 பேர் மீது புகார் அளித்தார். ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சேகரும், முன்னாள் அமைச்சரின் சகோதரர் என்பதாலும், பாலம் அமைக்கக் கூடாது என தொழிலாளர்களை மிரட்டியதோடு, ஜே.சி.பி.யையும் பயன்படுத்தி பணியை முடக்கினார்.

விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் மற்றும் 3 பேர் மீது ஐபிசி 147, 341, 353, மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

மனுதாரர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடுதல் அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அமைச்சர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்தார். இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Vignesh

Next Post

"நாட்டைவிட்டு வெளியேற மோடி அரசு கட்டாயப்படுத்தியது" - பெண் பத்திரிகையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Thu Apr 25 , 2024
தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேற மோடி அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். Avani Dias: ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், ‘தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன்’ எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏபிசி எனப்படும் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்தின் தெற்காசிய பணியகத் தலைவராக பணிபுரிபவர் அவனி தியாஸ். இவர், […]

You May Like