மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழபுதூரில் திருமணத்திற்கு பின்னர் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும் , தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தேனி மாவட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார் ஹரிபிரசாத் . திருமணம் நடைபெற்ற பிறகு மணப்பெண் மாறிவிடக் கூடும் என நினைத்த ஹரிபிரசாத்தின் நண்பர்கள் திருமணத்திற்கு பின்னர் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறி ஒப்பந்தம் போட நினைத்துள்ளனர். இதையடுத்து ரூ.20க்கு பத்திரம் வாங்கி திருமணத்திறஙகு வந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் ஒப்பந்த பத்திரத்தை நீட்டி மணப்பெண் இதற்கு சம்மதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதே போல சனி , ஞாயிறுகளில் நேரத்திற்கு வீட்டு வர வேண்டும் எனவும் மணப்பெண் வாய்மொழி உத்தரவாதம் வாங்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் என்ற கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார் ஹரி பிரசாத் அடிக்கடி டோர்னமென்டுகள் நடத்தி வருகின்றார். இவருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளதால் இவரது நண்பர்கள் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபாடு காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கெண்டனர்.