மதுரையில் வரும் 2024ம் ஆண்டுக்குள் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் இது உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. அனைவரும் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதற்காக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக இடம் தேர்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் மதுரை மாவட்டம் கீழக்கரை அருகே ஆய்வு செய்தனர். அப்போது அவர் பேசுகைளில் , ’’ தென் மக்களின்மனம் நிறைவடையும் வகையில் விரைவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும். அலங்கா நல்லூர் பகுதியிலேயே மைதானம் அமைய வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து தற்போது இடத்தை தேர்வு செய்துள்ளோம். அரசு நிலம் 66 ஏக்கரில் உள்ளது. இத்திட்டத்திற்கு 16 ஏக்கர் நிலம் தேவைப்பகின்றது. இதற்கான அனுமதி பெறுவது என விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய பின்னர் மைதானத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் வனத்தை ஒட்டிய பகுதியாக இருந்தாலும் வனம்கையகப்படுத்தப்படாது’’ என்றார்.
ஆய்வின்போது , மலையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் குளம் ஒன்று ஏற்கனவே உள்ளது . இது பற்றி கூறியபோது அதை பயனாளிகள்மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவற்காக மேம்படுத்தித் தரப்படும் எனவும் தெரிவித்தார்.