fbpx

Breaking…! மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி…!

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி. விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சி.பி.எம். 24 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ..பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ,வாசுகி, டி.கே. ரங்கராஜன், எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம், எம் எல்ஏக்கள் நாகை மாலி, சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மாநில மாநாட்டையொட்டி விழுப்புரம் -சென்னை சாலையிலிருந்து மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கும் பேரணி தொடங்கியது. காட்பாடி மேம்பாலம், மருத்துவமனை வீதி, நான்கு முனை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் வழியாக தொடங்கிய பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் நகராட்சித் திடல் பகுதியை அடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், பேபி, ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசுகின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், மாவட்டங்களிலிருந்து கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சி.பி.எம். 24 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

English Summary

Madurai MP Su. Venkatesan admitted to hospital due to chest pain

Vignesh

Next Post

OYO Hotel | இனி திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு அனுமதி கிடையாது.. செக்-இன் விதிகளின் மாற்றம் கொண்டு வந்த OYO..!!

Sun Jan 5 , 2025
OYO revises rules in this city, unmarried couples won't be allowed to check-in

You May Like