fbpx

அதிரடி கைது.. மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்!

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் நடிகர் சாஹில் கான் சத்தீஸ்கரில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் ஆகிய இருவரும் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர். இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர்.

இது தொடர்பாகவும் அமலாக்கத் துறை ஏற்கெனவே பலரை கைது செய்துள்ளது. செயலியின் உரிமையாளர்கள் ரவி உப்பால் மற்றும் சவுரப் சந்திரகர் இருவரும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சஹில் கான் ‘தி லயன் புக் ஆப்’ என்ற பந்தய செயலி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இது மகாதேவ் பந்தய செயலி நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கில் மும்பை காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன்னதாக அவரிடம் விசாரணை நடத்தியது. மேலும், சாஹில் கான் ‘தி லோட்டஸ் புக் ஆப்’ இல் பங்குதாரராக உள்ளார். அந்த செயலியின் விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர், ‘லோட்டஸ் புக் 24/7’ செயலியின் பங்குதாரராகவும் உள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றம் நடிகர் சஹில் கானின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து, மும்பை போலீஸ் சைபர் செல் சிறப்பு புலனாய்வுக் குழுவால் (SIT) சாஹில் கான் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பிடிபட்ட அவர் மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சஹில் கானின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் காவல்துறையினரின் உதவியுடன் 40 மணி நேரத்திற்கும் மேலாக தேடியப் பிறகு சஹில் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Post

கோடையில் குளுகுளு.. வெறும் 500 ரூபாயில் மினி ஏசி.. கரண்ட் பில் கவலையில்லை.. இதோ விவரம்..!

Sun Apr 28 , 2024
வெறும் 500 ரூபாயில் மினி ஏசி வாங்க முடியும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?.. ஆம், ஆன்லைனில் குறைந்த விலையில் இந்த மினி ஏர் கூலரை வாங்கலாம். கோடை வெயில் இப்போதே தொடங்கிவிட்டது. அனைவருமே இன்னும் சில நாட்களில் கடும் வெப்பத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட Bவீட்டில் ஃபேன், ஏர் கூலர், ஏசி இல்லாமல் வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கும். நாள் முழுவதும் ஏர் கூலர் அல்லது ஏசியை போட்டு வைத்திருந்தாலும் […]

You May Like