மருத்துவரை சந்திக்க வந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் துரிதமாக செயல்பட்டு மருத்துவர் அவரை காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகின்றது.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நோயாளி ஒருவர் மருத்துவனைக்கு வந்தார். அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் திடீரென மயங்கினார். இதையடுத்து மருத்துவர் உடனடியாக சென்று அவரது மார்பில் குத்தி மீண்டும் அவரை சமநிலைக்கு கொண்டு வந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது. மருத்துவருக்கு நோயாளியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தலங்களில் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.