மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், 2 மணிநேரத்திற்கு பிறகு நிகழ்வில் கலந்துகொள்ள போலீசார் அனுமதி அளித்தனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள துஷார் காந்தி, “சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற என்னை காவல்துறையினர் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இந்த வரலாற்று நாளில் எனது முன்னோர்கள் பிரிட்டிஷ் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை எண்ணி பெருமை கொள்கிறேன்“’” என பதிவிட்டுள்ளார்.