fbpx

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால், இத்தனை கோடி ரூபாய் அபராதமா…..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்……!

நாட்டில், வங்கி கணக்குகளில், போதுமான இருப்பு தொகை இல்லாததால், வங்கிகளிடமிருந்து, இதுவரையில், எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு தற்போது நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது, நாட்டில் வங்கி கணக்குகளில், போதுமான இருப்பு தொகை பராமரிக்கப்படவில்லை என்றால், வாடிக்கையாளர்களிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளை பொறுத்து, மாறுபட்டதாக இருக்கும்.

அதை தொடர்ந்து, ஏடிஎம் பண பரிவர்த்தனை சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏடிஎம் சேவையை பொறுத்தவரையில், மூன்று முதல், ஐந்து பரிவர்த்தனை வரையில், இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம். ஆனால்,அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த சூழ்நிலையில் தான், குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்காத காரணத்தால், வாடிக்கையாளர்களிடமிருந்து, இதுவரையில், 35000 கோடி ரூபாயை வசூல் செய்ததாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்து இருக்கிறது. அதேபோல ஏடிஎம் பணம் பரிவர்த்தனை கட்டணமாக, 8289 கோடியும், எஸ் எம் எஸ் சேவைகளுக்காக 6254 கோடியும் வசூல் ஆகி இருக்கிறது என்று எழுத்துப்பூர்வமாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Post

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு…..!

Wed Aug 9 , 2023
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், காலியாக இருக்கின்ற junior Research fellow பணிகளுக்கு, நான்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணி தொடர்பான முழுமையாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய […]

You May Like