சினிமா பைனாஸ்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது..
தமிழ் சினிமா துறையில் பிரபல பைனாஸ்சியராக இருப்பவர் அன்புச்செழியன்.. மதுரையை சேர்ந்த இவர் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.. ஆண்டவன் கட்டளை, மருத, வெள்ளைக்கார துரை போற படங்களை அவர் தயாரித்துள்ளார்.. சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உதவியாகவும் அவர் இருந்துள்ளார்..
இந்நிலையில் சென்னை, நுங்கம்பாக்கம் மற்றும் மதுரையில் உள்ள அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. இன்று அதிகாலை 5 மணியில் இருந்து இந்த வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.. கடந்த 2020-ம் ஆண்டில் விஜய்யின் பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது..