மக்கள் பெரும்பாலும் பேருந்து போக்குவரத்தை விடவும் ரயில் போக்குவரத்தை தான் அதிகம் விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் போக்குவரத்து அதிக சிரமம் இருக்காது என மக்கள் கருதுகிறார்கள். மேலும் பயண கட்டணமும் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. மேலும் நேரமிச்சமும் உண்டாகிறது. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அநேக சமயங்களில் வெகுதூர பயணத்திற்காக ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
அந்த வகையில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வேத்துறை அறிவித்திருக்கிறது. பஹாங்கா பஜார் ரயில் நிலையத்தில் தண்டவாள பணிகள் நடைபெற்று வருவதால் காரக்பூர் பத்ரக் வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாலிமர்- ஹைதராபாத் செகந்திராபாத் -திப்ருகார் செகந்திராபாத்- அகர்தலா திருப்பதி -சந்த்ராகாச்சி ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் சந்த்ராகாச்சி- தாம்பரம் எர்ணாகுளம்-ஹாவ் போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது