Make In India: இந்திய பிரதமராக கடந்த 2014-ல் நரேந்திர மோடி பதவியேற்றார். இதையடுத்து ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் அவர் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதில் பிரதமர் மோடி, ‘மேக் இன் இண்டியா’ அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 25, 2014-ல் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இத்திட்டம் 10 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், இந்த 10 ஆண்டுகளில் சர்வதேச உற்பத்தி சந்தையின் பல முக்கியத் துறைகளில் இந்தியா தனது தடத்தை பதித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் திட்டமாக உருவெடுத்துள்ளது.
இந்தநிலையில், ராஜ்யசபாவில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது, மேக் இன் இந்தியா திட்டம் உண்மையில் நல்ல பலன்களை தருகிறது. இதனால் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. ராணுவ தளவாட பொருட்களை இறக்குமதி செய்து வந்த நம் நாடு, இத்திட்டத்தால், தற்போது அவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது. இத்திட்டம் நாட்டின் தொழில் துறை மற்றும் ஏற்றுமதி திறன்களை வலுப்படுத்துகிறது.
காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. அவற்றை நாங்கள் தற்போது சரிசெய்து வருகிறோம். மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை, அம்மாநிலத்தின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். அங்கு இயல்புநிலையை கொண்டுவர நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். மணிப்பூர் கலவரத்தில் எதிர்க்கட்சிகள் பழிசுமத்துவதை விட்டு விட்டு, அமைதி திரும்ப அரசுக்கு உதவ வேண்டும் என்று அவர் கூறினார்.
Readmore: தொடரும் ஐடி ஊழியர்கள் பணிநீக்கங்கள்!. பெங்களூரு பொருளாதாரம் பெரும் பாதிப்பு!.