காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தது காங்கிரஸ் கட்சி இதன் காரணமாக தலைவராக இருந்த ராகுல்காந்தி அப்பதவியைத் துறந்தார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் எவ்வளவு காலத்திற்குத்தான் இடைக்காலத் தலைவரை வைத்து கட்சி செயல்படும் என்று பல மாநிலங்களில் இருந்தும் கட்சியினர் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். இதையடுத்து கடந்த 17ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இருவரும் போட்டியிட்ட நிலையில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் முன்னிலை பெற்று புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தம் 9 ஆயிரத்து 500 பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டுப் பெட்டிகள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. கார்கே பெருவாரியான ஓட்டுக்களை பெற்று அபாரமாக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். 416 ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றதால் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நேரு குடும்பத்தில் அல்லாத ஒரு நபர் காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக இவர் கருதப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.