fbpx

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே..!! எத்தனை வாக்குகள் தெரியுமா..?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்காக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடியாக போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டது. அனைத்து மாநில வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுகள் மொத்தமாக சேர்க்கப்பட்டு அதன் பின் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், சசிதரூர் ஆயிரம் ஓட்டுகளை பெற்றார். மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 ஓட்டுகள் பெற்று பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே..!! எத்தனை வாக்குகள் தெரியுமா..?
சசிதரூர் – மல்லிகார்ஜுன கார்கே

எண்ணப்பட்ட வாக்குகளில் 416 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காந்தி குடும்பத்தின் ஆதரவை பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவே வெற்றி பெறுவார் என்றும், தலைமையின் ஆதரவும் அவருக்கே இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகின. ஆனால், யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தெரிவித்திருந்தனர். காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களே ஒவ்வொரு முறையும் போட்டியின்றி தலைவராக தேர்வாகி வந்தனர். ஆனால், இந்த முறை காந்தி குடும்பத்தார் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பாததால் தற்போது தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே …

Wed Oct 19 , 2022
காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தது காங்கிரஸ் கட்சி இதன் காரணமாக தலைவராக இருந்த ராகுல்காந்தி அப்பதவியைத் துறந்தார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் எவ்வளவு காலத்திற்குத்தான் இடைக்காலத் தலைவரை வைத்து கட்சி செயல்படும் என்று பல மாநிலங்களில் இருந்தும் கட்சியினர் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். இதையடுத்து […]

You May Like