அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு , கொரோனா போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அவரது கருத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா; உதயநிதி ஸ்டாலின் எதன் அடிப்படையில் தனது கருத்துக்களை வெளியிட்டார் என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஒவ்வொரு தனிப்பட்ட மதத்திற்கும் தனித்தனி அடையாளம், உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் அதனை மதிக்க வேண்டும்.
நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். வேதங்களில் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புரோகிதர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. நான் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.