fbpx

மம்தா கட்சி அமைச்சரின் முர்மு குறித்த கருத்துக்கு  கடும் கண்டனம்…

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி மேற்கு வங்க அமைச்சருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் , மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி. இவர் குடியரசுத் தலைவர் பற்றி கருத்து கூறியது சர்ச்சையாகி வீடியோ வைரலாகி வருகின்றது. நந்தி கிராமத்தில் பா.ஜ.க. தலைவர் சுவெந்து அதிகாரி பேரணியை தாக்கி பேசினார்.இதற்கு அகில் கிரி பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

’’நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை’’ என்று சுவெந்து அதிகாரி தெரிவித்துள்ளார். நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள. எப்போதும் ஒருவரின் தோற்தற்தை வைத்து அவரை எடைபோடக்கூடாது. இந்திய ஜனாதிபதியாகத்தான் இருக்கின்றார். ஆனால், அவர் பார்ப்பதற்கு எப்படி இருக்கின்றார்? என பேசியுள்ளார்.

மேலும், சுவெந்து என்னை அரை – பேண்ட் அமைச்சர் என்று கூறுகின்றார். நான் அரை, பேண்ட் அமைச்சர் என்றால்? உங்கள் தந்தை அண்டர்வியர் அமைச்சரா என கேள்வி எழுப்பினார்..இந்த கருத்து வைரலாகி வரும் நிலையில் மம்தா பானர்ஜி பழங்குடியினருக்கு எதிரானவர் என பா.ஜ.க.வினர்கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

Next Post

பிபாஷா பாசு-வுக்கு பெண் குழந்தை பிறந்தது!!

Sat Nov 12 , 2022
பிரபல நடிகை பிபாஷா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தலங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகை பிபாஷா பாசு மற்றும் நடிகர் கரண் சிங் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தபோதே காதலித்தனர். இதையடுத்து கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராமில், தான் கருவுற்றிருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு தகவலை பரிமாறிக் கொண்டார். இந்நிலையில் பிபாஷா பாசுவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

You May Like