fbpx

75 சடலங்களுக்கு மத்தியில் செக்ஸ்.. பிரேத பரிசோதனை அறையில் ஊழியர் செய்த அட்டூழியம்..!! – வைரலாகும் வீடியோ

நொய்டாவின் உள்ள பிரேத பரிசோதனை அறையில் இருந்து அதிர்ச்சியூடடும் வீடியோ வெளியாகியுள்ளது, ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டார் 94ல் உள்ள மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் ஆண் ஒருவர் பெண் உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் பிரேத பரிசோதனை அறையில் தூய்மை பணியாளராக பணிபுரிகிறார். பிரேத பரிசோதனை அறையில் ஆண் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதை சக ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுப்பதை கவனித்த பிறகும் அவர்கள் அந்த கீழ்த்தரமான வேலையை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, போலீசார் பதில் அளித்துள்ளனர்.

போலீசார் கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அந்த துப்புரவாளர் மேலதிகாரிகளால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், பிரேத பரிசோதனை அறையில் பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை.. வீடியோவில் உள்ள அந்த பெண் வெளியில் இருந்து அங்கு வரவழைக்கப்பட்டதாக கூறினர். இருப்பினும், இந்த பாலியல் செயல் பெண்ணின் சம்மதத்துடன் செய்யப்பட்டதா அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரேத பரிசோதனை அறை பொறுப்பாளர் டாக்டர் ஜெய்சலால் கூறியதாவது: துப்புரவு பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பதிலளித்த நொய்டா டிசிபி, கைது செய்யப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

Read more ; வாடிக்கையாளர்களே..!! நோட் பண்ணிக்கோங்க..!! தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது..!!

English Summary

Man And Woman Filmed In Obscene Act In Noida Deep Freezer Room Where Dead Bodies Are Stored

Next Post

National Space Day 2024 | 'வானம் கூட எல்லை அல்ல..!!' முதல் தேசிய விண்வெளி தினம் இன்று..!!

Fri Aug 23 , 2024
ISRO Day, celebrated annually on 23 August, is celebrated across India to commemorate the founding of the Indian Space Research Organization (ISRO) in 1969.

You May Like