fbpx

KERALA| பக்கத்து வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா.! கேரள வாலிபர் அதிரடி கைது.!

Kerala மாநிலத்தில் குளியலறையில் கேமராவை பொருத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆபாசமாக வீடியோ பதிவு செய்த நபர் பல மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள(kerala) மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த திருவல்லா என்ற ஊரைச் சேர்ந்த பிரினு என்ற 30 வயது இளைஞர் தனது பக்கத்து வீட்டின் குளியலறையில் ரகசிய கேமராவை பொருத்தி அந்த வீட்டில் உள்ள பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் குளிப்பதை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினார் . தன்மீது புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த இளைஞர் தலைமறைவானார். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்த அவர் எர்ணாகுளத்தில் உள்ள விஜிலென்ஸ் அதிகாரியான தனது வைத்துணரின் வீட்டில் தலைமறைவாக இருந்தபோது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களது குளியலறையில் பல மாதங்களாக கேமரா பொறுக்கி ஆபாச காட்சிகளை பதிவு செய்து வந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். பக்கத்து வீட்டு இளைஞர் குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

Lok Sabha Election | ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு..? மே 22இல் வாக்கு எண்ணிக்கை..? இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்..!!

Sat Feb 24 , 2024
லோக்சபா தேர்தல் குறித்து பரவிய தகவல்கள் வதந்தி என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. Lok Sabha Election | 17-வது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணும் நாள், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் போன்றவை பற்றிய அறிவிப்பு மார்ச் 12ஆம் தேதி வெளியாகும், […]

You May Like