1500 தங்க நகைகளுடன் ஊர் ஊராய் ஓடி ஒளிந்து கொண்டிருந்த பட்டறை உரிமையாளரை கோவையில் போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுஜித் மைட்டி (40). கடந்த 2012ம் ஆண்டு இவர் ஒரு முறை கோவை வந்தார். அங்கு செட்டி வீதியில் உள்ள தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தொழில் ரீதியாக பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்துள்ளார்.
இந்நிநிலையில் இவரிடம் பலர் தங்க கட்டிகளை கொடுத்து நகைகளாக மாற்றி வாங்கி வநதனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல் தொடங்கியதால் கிரிக்கெட்டில் பெட்டிங் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு பெட் கட்டியுள்ளார். ஆரம்பத்தில் பணம் வந்தது. இதில் லட்சக்கணக்கானோர் அவரிடம் பணத்தை இழந்தனர்.
இதற்காக பலரிடம் நகைகளாக வாங்கிக் கொண்டு விற்று செலவு செய்துள்ளார். பின்னர் நகைகளை கொடுத்தவர்கள் பணம் தருவதாக கேட்டுள்ளார்கள். இவரிடம் வாங்கிய நகையை வேறொருவருிடம் என மாற்றி மாற்றி சுற்றவிட்டு சமாளித்து வந்துள்ளார். இவரிடம் 2 கிலோ அளவுக்கு தங்கம் இருந்துள்ளது. அதை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் தங்கத்தை கொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்து வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து சுஜித்தை பிடிக்க தீவிரமாக தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
தனிப்படையினர், அவரது செல்போன் எண்ணை கொண்டு டவரை ஆய்வு செய்தபோது டெல்லியில்இருந்து பேசியது தெரியவந்தது. அந்த எண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ரயில் மூலம் அவர் கோவைக்கு வருவது தெரிந்த போலீஸ் மிகத்துல்லியமாக ஸ்கெட்ச் போட்டு அவன் ரயிலை விட்டு கீழே இறங்கியதும் போலீசார் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவனிடம் இருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின்னர் சிறையில் அடைத்தனர்.