பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, ஞானவாபி விவகாரம் குறித்த தொலைக்காட்சி செய்தி விவாதத்தின் போது நபிகள் நாயகத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.. இதையடுத்து நுபுர்ஷர்மா மீது பல காவல்நிலையங்களில் புகாரளிக்கப்பட்டது.. மேலும் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நுபுர் ஷர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது.. மேலும் பல்வேறு அரபு நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன..
இந்நிலையில் ராஜஸ்தானின் அஜ்மீரை சேர்ந்த சல்மான் சிஷ்டி என்ற சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும் “ என்னைப் பெற்றெடுத்த என் தாயின் மீது சத்தியம் செய்கிறேன்.. நான் அவரை சுட்டுக் கொன்றிருப்பேன்.. என் குழந்தைகள் மீது சத்தியம் செய்கிறேன்.. நூபுர் ஷர்மாவின் தலையை யார் கொண்டு வருகிறாரோ, அவருக்கு எனது வீட்டைக் கொடுப்பேன். இதற்கு சல்மான் உறுதியளிக்கிறார்..” என்று தெரிவித்திருந்தார்..
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.. இந்நிலையில் சல்மான் சிஷ்டியை அஜ்மீர் போலீஸார் நேற்று இரவு கைது செய்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) விகாஸ் சங்வான் தெரிவித்தார். காதிம் சல்மான் சிஷ்டி நள்ளிரவு 12.45 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.. நுபுர் ஷர்மாவை கொலை செய்வதாக வெளிப்படையாக மிரட்டியதால் அவர் கைது செய்யப்பட்டதாக விகாஸ் சங்வான் தெரிவித்துள்ளார்..