fbpx

“மட்டனுக்கு கலவரமா.”? கறி சமைக்காத ஆத்திரத்தில் மகன் மனைவிக்கு அரிவாள் வெட்டு.! ஈரோடு அருகே பயங்கரம்.!

ஈரோடு அருகே மட்டன் சமைக்காத ஆத்திரத்தில் மனைவி மற்றும் மகனை வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாளி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி(50). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான கருப்பசாமி அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து மனைவி மற்றும் மகன்கள் இடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் அவர்களது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த கருப்புசாமி, தனக்கு மட்டன் சாப்பாடு வேண்டும் என கேட்டு இருக்கிறார். ஆனால் வீட்டில் மட்டன் சமைக்கவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கருப்பசாமி வீட்டிலிருந்த அரிவாள் எடுத்து தனது மனைவியின் தலையில் வெட்டி இருக்கிறார். இதனைக் கண்ட அவரது மகன் பிரகாஷ்ராஜ் தடுக்க வந்துள்ளார். அப்போது மகனையும் கடுமையாக வெட்டி இருக்கிறார் கருப்பசாமி. இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தாய் மற்றும் மகனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கருப்பசாமியை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மட்டன் சமைக்காததால் மனைவி மற்றும் மகன் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

English Summary:Alcoholic husband attacks his wife and son with scythe due to a fight over mutton meal

Read more : https://1newsnation.com/rituraj-singh-thadhavu-movie-actor-rituraj-singh-passed-away-due-to-heart-attack-the-film-industry-is-shocked/

Next Post

"தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய பயணம்"...! - தனது நடை பயணம் குறித்து அண்ணாமலை பேட்டி.!

Tue Feb 20 , 2024
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரத்தில் தொடங்கிய இவரது பயணத்தை, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனையைப் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறினார் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் […]

You May Like