ஜப்பானைச் சேர்ந்த மனிதன் தன்னை முற்றிலும் ஓநாய் ஆக மாற்றிக் கொள்கிறான். இதனை பற்றி அந்த நபர் கூறியதாவது “எனக்கு சின்ன வயசுல இருந்தே விலங்குகள் ரொம்ப பிடிக்கும். டிவியில சில பேர் மிருகங்கள் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு இருந்ததை பார்த்திருக்கேன். அதையெல்லாம் பார்த்து நான் இப்படி ஒரு விலங்காக மாறணும்னு நினைச்சேன்” என்கிறார் அந்த நபர்.
தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து ஜெப்பெட் என்ற நிறுவனத்தை அணுகினார். நிறுவனம் உடல் அளவீடுகளை எடுத்து, பொருத்தமான ஓநாய் தோற்றத்தைக் கண்டுபிடிக்க பல ஓநாய்களின் படங்களைப் பார்த்துள்ளனர்.
அப்படிப் பகுத்தாய்ந்த பிறகு, ஐம்பது நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஆடையைக் கொடுத்துள்ளது அந்த நிறுவனம். அதை அணிந்த பிறகு, தான் நினைத்தது போல் ஓநாயாக மாறியதை கண்டு மகிழ்ச்சி அடைகிறார்.
“இறுதியாக எனக்குக் கொடுக்கப்பட்ட ஆடையை அணிந்து கண்ணாடியில் பார்த்தபோது, நான் ஆச்சரியப்பட்டேன். அது எனது கனவு நனவான தருணம். ஓநாய் போல் நாலாபுறமும் நடப்பது எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் நான் நினைத்தபடி ஓநாயாக இருந்தேன்,” என்று அவர் கூறுகிறார். இதற்காக, இந்திய மதிப்பில் 18.5 லட்சம் அதாவது 30 லட்சம் யென் செலவு செய்துள்ளார் அந்த மனிதர்!
இவரின் இயல்பான ஆசையை நிறைவேற்றியது போல் இன்னொருவரின் ஆசையையும் ஜெப்பெட் நிறுவனம் நிறைவேற்றியது. டோகோ என்பவர் விரும்பிய நாயாக மாற வழிவகுத்துள்ளனர்.