ஆசைங்கு இணங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பெண்ணின் கழுத்தை பீர்பாட்டிலால் குத்தி அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டமன்ற உறுப்பினர் மாகண்டி கோபிநாத். இவரது தனிப்பட்ட உதவியாளராக விஜயசிம்கா என்பவர் பணியாற்றி வருகின்றார். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றபோது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 வயது பெண் நிஷா என்பவருடன் சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் விஜய் சிம்காவுக்கு மிகவும் நெருக்கமாகியுள்ளார்.
நிஷாவுக்கு திருமணமாகி சூரஜ் என்பவருடன் வாழ்க்கை நடத்தி வருகின்றார். இந்நிலையில் குடிபோதையில் நிஷா வீட்டுக்குச் சென்ற விஜய சிம்கா தன் ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். இதற்கு நிஷா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விஜயசிம்கா பீர் பாட்டிலை உடைத்து நிஷாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார். படுகாயம் அடைந்த நிஷா தன் கணவர் சூரஜுக்கு தெரிவித்தார்.
வீட்டுக்கு வந்து மனைவியை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இது குறித்து ஜூபிலி ஹில்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சம்பவம் நடந்போது கணவர் எங்கு இருந்தார் எனவும் விசாரணை நடத்தப்பட்டது. குற்றத்தில் ஈடுபட்ட விஜயசிம்காவை போலீசார் தேடி வருகின்றனர்.
விஜயசிம்காவுக்கும் நிஷாவுக்கும் இடையே இருந்த தொடர்பு சூரஜுக்கு ஏற்கனவே தெரியும் எனவும் கூறப்பகின்றது. அரசியல் பலமிக்கவர் என்பதால் இது பற்றி தெரியாதது போலவே காட்டிக்கொண்டுள்ளார் சூரஜ்.