fbpx

”குரங்கிலிருந்து பரிணமித்தவன் மனிதன்”!… பரிணாம வளர்ச்சியின் தந்தை சார்லஸ் டார்வின் பிறந்த தினம்!

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் பிறந்த நாள் இன்று. அவர் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் தந்தை எனப்படும் சார்லஸ் ராபர்ட் டார்வினின் பிறந்த நாள் இன்று. இவர் ஆங்கிலேயே இயற்கையியல் அறிஞர். இதுவரை வாழ்ந்த உயிரியலாளர்களுள் மிக முக்கியமானவராக இவர் திகழ்வதற்கு அவரது பரிணாம வளர்ச்சி கொள்கைளையே சிறந்ததும், மக்கள் அதிகம் ஏற்றுக்கொண்டதும் காரணமாகும்.

இவரின் பரிணாம வளர்ச்சி கொள்கை ஒரு அடிப்படையான புரட்சிகரமான அறிவியல் கொள்கை. இவர் தான் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும் 1859ம் ஆண்டு உயிரனங்களின் தோற்றம் என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். இந்த புத்தகம் புகழ்பெற்றதும், புரட்சியை ஏற்படுத்தியதும் ஆகும். இவர் கப்பலில் உலகம் முழுவதும் பல இடங்களில் சுற்றி உயிரன கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இவர் அன்று கூறியவற்றை பலர் எள்ளி நகையாடினர். ஆனால் இன்று இவர் அறிவியல் உலகம் போற்றும் மாபெரும் அறிஞர். இவரது கருத்துகளும் அறிவியல் உலகம் இன்றும் கொண்டாடும் மதிப்புடையவை.

‘குரங்கிலிருந்து பரிணமித்தவன் மனிதன்‘, உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சி ‘தகுதியானது உயிர்பிழைக்கும்‘ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளை கண்டறிந்தவர்.

சார்லஸ் ராபர்ட் டார்வின், 1809ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி இங்கிலாந்தில் உள்ள சுருஸ்பெரி எனுமிடத்தில் பிறந்தவர். இவரது தந்தை ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர். அவரது தாத்தாவும் மருத்துவர். எனவே அவரது தந்தை இவரும் மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சார்லசுக்கு மருத்துவத்தில் நாட்டமில்லை. அவர் உயிரினங்கள் மற்றும் இயற்கையை நேசித்தார்.

தனது 22 வயதில் ராபர்ட் பிட்ஸ்ராய் என்பவருடன் தென் அமெரிக்க கடலோர பகுதிகளில் 5 ஆண்டுகள் செய்த ஆய்வுகளின் மூலம், மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் எனும் பரிணாம கொள்கையை கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த டார்வின் 1851ம் ஆண்டு தனது மகள் ஆனி இறந்த பின்னர் கடவுள் நம்பிக்கையை குறைத்துக்கொண்டார். தேவாலயத்திற்கு செல்வதையும் குறைத்துக்கொண்டார். தமது 30வது வயதில் எம்மா வெட்ஜ்வுட் என்ற உறவினர் பெண்ணை மணந்து 7 குழந்தைகளுக்கு தந்தையானார். டார்வின் தனது 73வது வயதில் 1882ம் ஆண்டு மறைந்தார்.

Kokila

Next Post

ரயில் நிலையத்திற்கு செல்ல பாஸ்போர்ட், விசா தேவை!… இந்தியாவில் இப்படியொரு ரயில் நிலையமா?… காரணம் இதோ!

Mon Feb 12 , 2024
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். நாட்டில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த ரயில்களில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடியாக கருதப்படுகிறது. தகவலின்படி, இந்தியாவில் உள்ள மொத்த ரயில் நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 8000 ஆகும். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா தேவை. இந்த ரயில் நிலையம் எங்கு உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் […]

You May Like