ஆந்திராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடுக்கில் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கிட்டலூர் என்ற ரயில் நிலையத்தில்இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹுப்ளி – விஜயவாடாஇடையே விரைவு ரயிலில் கர்நாடகாவில் இருந்து ரவிக்குமார் என்ற நபர் நந்தியாலா வந்துள்ளார். இவர் ரயில்வேயில் வேலைபார்க்கும் பணியாளர் ஆவார். ரயிலில் அவர் தூங்கிவிட்டதால் தான் வந்த ரயில்லையத்தில் அவர் இறங்க முடியவில்லை இதனால் கிட்லூர் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து புறப்பட்டது.
ரயில்வே ஊழியரான அவர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே வசமாக சிக்கிக்கொண்டார். இந்நிலையில் ரயில்வே கார்டு உடனடியாக இதைப் பார்த்து வண்டியை நிறுத்தினார். ஆனால் இடையில் சிக்கிக் கொண்ட அந்த நபரை மீட்க முடியவில்லை. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் சுத்தியல் , கடப்பாறையைக் கொண்டு நடைமேடையை உடைத்து மீட்டனர்.
இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடுப்பில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. துரிதமாக செயல்பட்டு ரயில் நிறுத்தப்பட்டதால் அவர் உயிர் தப்பினார். இல்லை என்றால் அவர் விபரீதத்தை சந்தித்திருப்பார்.