crime: விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது தம்பி பாரதி. கதிர்வேல் டைல்ஸ் போடும் செய்து வந்தார். அண்ணன் மற்றும் தம்பி இருவருக்கும் திருமணமான நிலையில் தங்களது குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் பாரதியின் மனைவி புஷ்பா வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த புஷ்பா மனம் திருந்தி பாரதியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக பாரதி மற்றும் அவரது அண்ணனான கதிர்வேல் ஆகியோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. வேறு ஒரு நபருடன் கள்ள தொடர்பு இருந்த பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்துவது சரி இல்லை கதிர்வேல் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பிய கதிர்வேல் தனது தம்பி வீட்டிற்கு சென்று அவரது மனைவியுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் பாரதியின் மனைவி புஷ்பாவை தகாத வார்த்தைகளாலும் திட்டி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வீட்டிற்கு வந்த பாரதியிடம் நடந்த விவரங்களை கூறியிருக்கிறார் அவரது மனைவி புஷ்பா.
இதனால் ஆத்திரமடைந்த பாரதி தனது அண்ணன் கதிர்வேலின் வீட்டிற்கு சென்று தனது மனைவி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அண்ணனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் வீட்டிலிருந்த மண்வெட்டியை எடுத்து தனது அண்ணன் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார் பாரதி. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட கதிர்வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய அவரது தம்பி பாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்த தகராறில் அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது .