fbpx

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் கணவனை போட்டுத்தள்ளிய இளைஞர்…..! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்…..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கந்தி வாலி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்சவான் (32) இவர் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி அன்று அவர் மர்மமான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய உடலை கைப்பற்றிய காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளது.

அதாவது மனோஜ்க்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவருடைய மனைவிக்கும் ரோஹித் சந்திரசேகரபால் 23 என்ற இளைஞருக்கும் திருமணத்திற்கு முன்பு இருந்தே தொடர்பு இருந்துள்ளது. இந்த உறவு மனோஜுடன் திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்குப் பிறகு தனது மனோஜ் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு இந்த உண்மை தெரிய வந்ததால் அந்த பெண்ணையும் ரோகித்தையும் மனோஜ் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனாலும் ரோகித் அதனை பொருட்படுத்தாமல் அந்த பெண்ணை தொடர்பு கொண்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட மனோஜின் குடும்பத்தினர், ரோஹித்தை அடித்து விரட்டி இருக்கின்றனர். தன்னுடைய காதலை தொடர இயலாத கோபத்தில் மனோஜை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ரோகித் நாட்டு துப்பாக்கி ஒன்றை வாங்கி இருக்கிறார்.

ஆகவே ரோகித் மனோஜின் நடமாட்டங்களை மறைந்து இருந்து கவனித்து, கடந்த 27ஆம் தேதி தன்னுடைய துப்பாக்கியால் மனோஜை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையிலும் மனோஜ் மற்றும் அவருடைய மனைவியின் செல்ஃபோன் அழைப்புகள் உதவியுடன் கொலையாளி ரோகித் மும்பை காவல்துறையினர் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் உத்திரபிரதேசத்தின் பிரக்யாக்ராஜ் பழனிக்கு தப்பி சென்றதை கண்டுபிடித்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து ரோஹித்தை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ரோகித் நீதிமன்றத்தின் ஆஜர்ப் படுத்தப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 2ஆம் தேதி வரையில் போலீஸ்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது இந்த குரங்கில் மனோஜின் மனைவிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா? என்ற விதத்தில் காவல் துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர்

Next Post

விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன்..!! கடித்து குதறிய தெருநாய்கள்..!! பரிதாப பலி..!!

Thu Jun 1 , 2023
தெருநாய்கள் கடித்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லத்தி தாலுகாவில் உள்ள தாம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் ரோனக் ரத்வா என்ற 3 வயது சிறுவன். விவசாய தொழிலாளியான சிறுவனின் பெற்றோர், மதுபாய் சித்பரா என்பவருக்கு சொந்தமான விவசாய வயலில் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் சென்ற சிறுவன் அங்கு விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இந்நிலையில், அங்கு திடீரென வந்த […]

You May Like