38 வயதான ராஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கோவை வடவள்ளியில் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்து வரும் இவர், தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது, அவர்கள் வீட்டில் உள்ள குளியல் அறை அருகே வாலிபர் ஒருவர் செல்போனுடன் நின்று கொண்டிருந்துள்ளார். ராஜியை பார்த்த உடன், வாலிபர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவரிடம் செல்போனை வாங்கி பார்த்த போது, அதில் ராஜி குளிக்கும் வீடியோ இருந்துள்ளது.
மேலும், அந்த வாலிபரின் செல்போனில் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் பெண்களின் குளியல் வீடியோ காட்சிகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜி, இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். மேலும், விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயதான சந்தோஷ் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் குளிக்கும் வீடியோ காட்கிகள் மற்றும் புகைப்படங்களை வைத்துள்ளார்.