fbpx

“மனைவி இல்லாம நான் எப்படி வாழ முடியும்”; மனைவி இறப்பால் முதியவருக்கு நேர்ந்த சோகம்..

தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணம் என்பது பலருக்கு பொழுது போக்கு ஆகிவிட்டது. ஆம், உண்மையான அன்பு என்பது மிகவும் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். போலியான அன்பு நிறைந்துள்ள இந்த காலகட்டத்தில் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் உயிரை விடும், சில உண்மையான காதலும் வாழ்கிறது என்பதை உணர்த்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கீழநாகை பகுதியை சேர்ந்தவர் 73 வயதான சிவஞானம். இவரது மனைவி 70 வயதான புஷ்பாம்பாள். இவர்களுக்கு திருமணமாகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இவர்கள் 2 மகன்கள் மற்றும் மருமகள், பேரக்குழந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், புஷ்பாம்பாளுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு மன்னார்குடி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புஷ்பாம்பாள் இறந்த துக்கத்தில் அவரது கணவர் சிவஞானம் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை சிவஞானம் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் பாசம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Maha

Next Post

6,6,6,6 தொடர்ந்து நாலு சிக்ஸர்களை பறக்கவிட்ட "SKY"..! அடித்து நொறுக்கிய இந்தியா.. ஆஸ்திரேலியாவுக்கு 400 ரன்கள் இலக்கு…!

Sun Sep 24 , 2023
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான 2வது போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை […]

You May Like