fbpx

“உனக்கெல்லாம் எங்க வீட்டு பொண்ணு கேக்குதா”; மருத்துவ மாணவியை காதலித்த நபருக்கு நேர்ந்த சோகம்..

திருவாரூர் மாவட்டம் சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். பொறியியல் பட்டதாரியான இவர், ஆவின் நிறுவனம் ஒன்றில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் வாஞ்சியூர் என்ற இடத்தில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் இவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவரது தலையில் வெட்டு காயம் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகை மாவட்டம் ஆந்தங்குடியை சேர்ந்த மருத்துவக்கல்லுரி மாணவியை ராமசந்திரன் காதலித்ததால், மாணவியின் குடும்பத்தினர் இவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாணவியின் உறவினரான நந்தா, தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ராமசந்திரனை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், வேறு யாருக்கெல்லாம் கொலையில் தொடர்பு இருக்கிறது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Maha

Next Post

கடற்கரையில் காதலிக்கு நேர்ந்த விபரீதம்; காப்பாற்றாமல் காதலன் செய்த காரியம்..

Wed Oct 11 , 2023
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் குறித்து இருவரின் குடும்பத்திற்கும் தெரியவந்ததை அடுத்து, இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்ய பனிந்திரா முடிவு செய்துள்ளார். இதையடுத்து, பனித்ரா தனது காதலியை யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வரும்படி கூறியுள்ளார். […]

You May Like