தண்ணி உடலில் பட்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என 65 ஆண்டுகளாக உடலில் தண்ணீர் படாமல் குளிக்காமல் வந்த முதியவர் மரணமடைந்தார்.
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் அமுஹாஜி . இவர் சுமார் 65 ஆண்டுகளாக குளிக்காமலேயே உயிர்வாழ்ந்து வந்துள்ளார். மன் உடலில் சோப்பு, தண்ணீர் , மழை நீர் எதுவும் படாமல் குளிக்காமலேயே இருந்து வந்துள்ளார்.. உடலில் தண்ணீர் பட்டால் உடல் நலக்குறைவு ஏற்படும் என அவருக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் குளிக்காமல் இருந்ததாக கூறப்படுகின்றது.
94 வயதான அந்த முதியவர் இத்தனை ஆண்டுகள் குளிக்காமல் இருந்தது அனைவரையும் ஆச்சர்யபப்படுத்தியது. தேஜ்கா என்ற கிராமத்தில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உயிரிழந்தார். அவரை உலகின் மிக அழுக்கான மனிதர்என்றே அழைக்கப்பட்டுவந்தார்.
இது பற்றி கிராம மக்கள் கூறுகையில் , ’’சிறுவயதில் அவருக்கு நேர்ந்த சில உணர்ச்சிகரமான சம்பவத்தால் அவர் தண்ணீர் மற்றும் சுத்தத்தை வெறுத்துவிட்டார் . இருந்தாலும் நாங்கள் சில மாதங்களுக்கு முன்புதான் கட்டாயப்படுத்தி குளிக்க வைத்தோம். ’’ என தெரிவித்தனர்.
இவரைப் பற்றி 2013ல் ஒரு ஆவணப்படமும் வெளியாகி உள்ளது. இவர் சாலை ஓரங்களில் இறந்து கிடக்கும் விலங்குகளை உணவாகவும் அதன் கழிவுகளை சிககெரட் தயாரிக்க பயன்படுத்தி அதை குடித்த வந்ததாகவும் தொடர்ந்து ஒரே நேரத்தில் அதிக சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்துள்ளார். தூய்மையாக இருத்தலும் , சுத்தமாக இருந்தாலே நோய்கள் தொற்றிக் கொள்வதாக அவருக்குள் இருந்த நம்பிக்தைதான் அவரின் இது போன்ற பழக்கத்திற்கு காரணம் என கூறுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு முதியவரை குளிக்க வைத்தது முதல் அவர் மனம் உடைந்தே காணப்பட்டுள்ளார். குளிக்க வைத்தால் நான் இறந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார். தற்போது அவர் இறந்துவிட்டதால் குளிக்க வைத்ததால் அவர் இறந்துவிட்டதாககவும் ஒரு புறம் பேசப்பட்டு வருகின்றது.