மாங்கனி திருவிழாவானது காரைக்காலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை கூறும் விதமாக இம்மாங்கனி திருவிழாவானது கொண்டாடப்படுகிறது. இவ்வூரில், காரைக்கால் அம்மையாருக்கென்று ஒரு தனிக்கோவிலானது பாரதியார் சாலையில் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் மாங்கனி திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெருகிறது.
இதில் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதிக்கும், பரமதத்தனுக்கும் திருமண வைபவம் நடைபெறும். இந்நிகழ்ச்சியின் போது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதில் பங்குக்கொண்டு மாங்கனிகளை அம்மையாருக்கு படைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் இந்த வருடம் இத்திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்துக்கொண்ட பக்தர்கள் ஏராளமான மாங்கனிகளை படைத்து வழிபட்டதுடன் அதை பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.