மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என முதலமைச்சர் பிரேன் சிங் கருத்து தெரிவித்து உள்ளார்.
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிப்பதற்கு ஆதரவாக அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு, அம்மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓபியம் பயிரிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி-ஜோமி பழங்குடியினர் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பழங்குடியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. மாநிலத்தில் நடைபெறும் இந்த வன்முறை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் வெளிநாட்டு சதி இருப்பதாக முதலமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முதலமைச்சர் பைரன்சிங்; மாநிலத்தில் பல உயிர்களைக் கொன்ற இன வன்முறையில் வெளிப்புற சக்திகள் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார், இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. மணிப்பூர் மியான்மருடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. சீனாவும் அருகில் உள்ளது. நமது எல்லைகளில் 398 கிமீ தூரம் நுண்துளைகள் மற்றும் பாதுகாப்பற்றது என்றார்.