சென்ற மே மாதம் 4ம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில், இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அங்கு கலவரம் வெடித்தது. இதனால் இணைய சேவை முற்றிலுமாக, முடக்கி வைக்கப்பட்டது. அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது அங்கு மீண்டும் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆகவே பள்ளிகளை திறக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பாக, பலமுறை பள்ளிகள் திறப்பதற்கான முயற்சிகள் எடுத்த போதிலும், அது தோல்வியை சந்தித்தது. ஆனால், தற்போது பள்ளிக்கல்வி இயக்குனரகம் நேற்றைய தினம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், வரும் 10ம் தேதி முதல், அந்த மாநிலத்தில் இருக்கின்ற அனைத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில், நிவாரண முகாம்களாக செயல்படும் 28 பள்ளிகள் மட்டும் திறக்கப்படாது, என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.