fbpx

Mansoor Ali Khan | போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான்..!! எங்கு தெரியுமா..?

நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் எனும் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப்புலிகள் என சமீபத்தில் மாற்றினார். இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக தான் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அந்த தொகுதியில் உள்ள மயிலம், செஞ்சி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட இடங்களை புகழ்ந்து தமது அறிக்கையில் மன்சூர் அலிகான் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம் மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க; செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட; நான் சுகவாசி அல்ல பந்தா-வாசி அல்ல. மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும் பாலூர் ஆரணியே அன்ன பட்சியே நினை என் மனதின் ஆழ்நிலை சக்தியாய் தாயார் மகளாய் துதித்து பணி செய்ய ஆணையிடுவாய். தாழ் திறவாய் தரணி போற்றும் ஆரணியே” என தெரிவித்துள்ளார்.

சீமானுடன் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணித்த இவர், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். ஒரு கட்டத்தில் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார். இதன்பின் தமிழ் தேசியப் புலிகள் என புதிதாக கட்சியையும் தொடங்கினார். பின் அக்கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என மாற்றியிருந்தார். இந்நிலையில், ஆரணி தொகுதியில் இந்த வருடம் களம்காண உள்ளார்.

English Summary : Mansoor Alikhan announced the constituency to contest

Read More : Ration | இந்த நாட்களில் இனி ரேஷன் கடைக்கு போகாதீங்க..!! ஊழியர்கள் மகிழ்ச்சி..!! பொதுமக்கள் ஷாக்..!!

Chella

Next Post

PM Modi | ’சொன்னதை செய்யாத அண்ணாமலை’..!! ’கடும் அப்செட்டில் பிரதமர் மோடி’..!!

Thu Feb 29 , 2024
பிரதமர் மோடியின் மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரை அழைத்துச் செல்ல முடியாததால், பாஜக மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சந்திப்பையும் மோடி ரத்து செய்துள்ளார். தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி உடைந்தது. இதனால் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் இந்தக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தவர்களை இழுப்பதில் இரு கட்சியினருக்கும் இடையே போட்டா போட்டி உருவானது. அதில் முக்கிய கட்சிகளான பாமக, […]

You May Like