fbpx

Mansoor Ali Khan | பின்வாங்கிய மன்சூர் அலிகான்..!! ரூ.1 லட்சம் அபராத தொகையை ரத்து செய்த ஐகோர்ட்..!!

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லியோ திரைப்படம் வெளியான போது, நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் த்ரிஷா, குஷ்பு ஆகியோர் தமிழ்நாட்டில்
இருக்கும் நிலையில், சிரஞ்சீவி மட்டும் ஆந்திராவில் இருப்பதால் தான் அவருக்கு
எதிராக வழக்குத்தொடர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்ததாகவும், ஆனால் வழக்கு அபராதத்துடன், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அபராத உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கை தொடர
விரும்பவில்லை எனவும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

English Summary : The High Court canceled the fine of Rs 1 lakh imposed on Mansoor Ali Khan

Read More : ADMK | திமுகவுடன் மனக்கசப்பு..!! காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்த முக்கிய புள்ளி..!! பரபரப்பில் அரசியல் களம்..!!

Chella

Next Post

Deputy CM | செம ட்விஸ்ட்..!! துணை முதல்வர் பதவி கேட்கும் பாமக..!! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!!

Thu Feb 29 , 2024
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் […]

You May Like