fbpx

வங்கக்கடலில் உருவானது மாண்டஸ் புயல்!!! நாளை நள்ளிரவு கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. மேலும் சென்னைக்கு தென்கிழக்கே 640 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது இந்த மாண்டஸ் புயல். அதிகாலை நிலவரப்படி, இந்த புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Kathir

Next Post

இன்னும் சற்று நேரத்தில்... குஜராத் தேர்தல் வாக்கு பதிவு எண்ணிக்கை தொடக்கம்...! ஆட்சியை பிடிக்குமா பாஜக...?

Thu Dec 8 , 2022
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்க உள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் போன்ற முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். பாஜக மீண்டும் குஜராத்தில் ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறது, மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான போக்கைக் குறைக்கும் […]

You May Like