fbpx

அகோரி கலையரசனால் பல பெண்களின் வாழ்க்கை சீரழியப் போகுது..!! மனைவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!

தேனி மாவட்டம் போடி புதுக்காலனி அன்னை இந்தியா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தவர் கலையரசன். இவர், அருள்வாக்கு கூறும் சித்தராக மாறி அகோரி சாமியாராக உருவெடுத்ததாக சொல்லிக் கொள்கிறார். காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்றதாக கூறப்படுகிறது. தண்ணீரில் நடப்பேன், முடியை வளர வைப்பேன் என்றெல்லாம் இவர் யூடியூபில் பேசி பிரபலம் அடைந்தார்.

இவர் முன்னதாக நாட்டுப்புற கலைஞராக இருந்தவர். அப்போது, பிரகலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது, பிரகலட்சுமியை பார்த்த முதல் சந்திப்பிலேயே காதலை வெளிப்படுத்தி அடுத்த நாளே தாலிக் கட்டிக் கொண்டனர். இருவருக்கும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் விஜயகாந்த் சமாதிக்கு சென்று வழிப்பட்டுள்ளார். இதுகுறித்து கேட்ட போது விஜயகாந்தின் மரணம் தனக்கு முன்கூட்டியே தெரியும். அதற்காக அவரை பார்க்க முற்பட்டேன். ஆனால், நான் காசியில் இருந்தேன். விஜயகாந்த் சமாதி சமாதியல்ல. அது ஒரு கோயில் என தெரிவித்திருந்தார்.

டிக்டாக் மூலம் பிரபலமான கலையரசன், தன் மாணவர்களுக்கு சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற கலைகளை சொல்லிக் கொடுத்து வந்தார். விஜயகாந்த் சமாதியில் கலையரசன் கூறுகையில், குழந்தை வரம் வேண்டுவோர் விஜயகாந்தின் சமாதிக்கு வாருங்கள் என தெரிவித்திருந்தார். அதேபோல், எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து இறந்ததற்கு முக்கிய காரணம் மாரடைப்பு அல்ல.. அவரது இறப்பு இயற்கையானதும் அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதாவது, மாரிமுத்து ஒரு சீரியலில் பெண்களை திட்டியும் கொடுமைப்படுத்தி வருகிறார். நிறைய பேரை அபசகுன வார்த்தைகளால் மாரிமுத்து திட்டியதால்தான் இறந்து போனார் என கலையரசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான், யூடியூபர் அகோரி கலையரசனை எங்கு பார்த்தாலும் அவரை போலீஸிடம் ஒப்படைக்குமாறு அவருடைய மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். முன்பெல்லாம் தனது கணவரின் அருமை பெருமைகளை அவருடைய மனைவி கூறி வந்த நிலையில், தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”என் கணவரை எங்கு பார்த்தாலும் போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடுங்கள். அவரால் நிறைய பெண்களின் வாழ்க்கை சீரழியப் போகிறது. கலையரசனின் செயல்பாடுகளை கண்டிப்பதால் என் குழந்தைகளை அடித்து துன்புறுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ”இதை அன்றே செய்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்”..!! பரபரப்பை கிளப்பிய எஸ்.பி.வேலுமணி..!!

English Summary

Please hand over my husband to the police wherever you see him.

Chella

Next Post

2026இல் விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா..? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்..!!

Tue Oct 29 , 2024
2026 assembly elections are one and a half years away. By then nothing can be said about the alliance.

You May Like