fbpx

மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை எதிரொலி!. வீரர்களுக்கு உதவித்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்வு!. ஒடிசா அரசு அதிரடி!

Odisha government: ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், துணிச்சலான வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகையை, ரூ.8,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒடிசா மாநிலம் குலாரிகாட் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது

இது குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலம் நுவாபாடா மாவட்ட எல்லையான குலாரிகாட் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்டுகள் 14 பேர் கொல்லப்பட்டனர். துணிச்சலான வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகையை ரூ.8,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஒடிசாவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த கூட்டு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

Readmore: IND vs ENG டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

English Summary

Maoists’ shooting death echoes!. Soldiers’ allowance increased to Rs.25 thousand!. Odisha government takes action!

Kokila

Next Post

"இனி மெட்ரோ ரயிலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி இல்லை"..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Wed Jan 22 , 2025
It has been announced that it is no longer permitted to eat while sitting inside the Chennai Metro train.

You May Like